hjk

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினை தமிழக அமைச்சரவையில் சேர்க்கத் தமிழக முதல்வர் கொடுத்த பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

இந்நிலையில் நாளை காலை 09.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உதயநிதி அமைச்சரானால் தமிழகத்தில் பாலாறும் தேனாறுமா ஓடப் போகிறது எனஇன்று காலை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.

Advertisment

இதற்கிடையே இதுதொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், " அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி. ஸ்டாலின் தனது நீண்ட நாள் கனவை தற்போது நிறைவேற்றிக்கொண்டுள்ளார். குடும்ப கட்சியாக திமுக மாறிவிட்டது. திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதையை திமுக எப்போதும் கொடுத்ததில்லை. எனவே இவர் அமைச்சர் ஆனாலும் ஆகாவிட்டாலும் தமிழக அரசு மோசமான ஆட்சியைத்தான் தரப்போகிறது" என்றார்.