திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று (27.11.2021) தனது44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு சிறப்பான வகையில் கொண்டாடப்பட்டுவருகிறது.

Advertisment

அந்த வகையில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இன்று ஆயிரம் விளக்கு பகுதியில் சுமார் இரண்டு லட்சம் மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பகுதி செயலாளர் மா.பா. அன்பு துரை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பொருட்களை வழங்கினார். ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன், கலாநிதி வீராசாமி எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.