Advertisment

“உதயநிதி ஸ்டாலின் மிகவும் ராசியானவர்...”- ஐ.பி.செந்தில்குமார்!

Udayanithi Stalin is very favourable person ...

Advertisment

பழனியில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் பழனி நகர உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்றம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்றம் செயலாளர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும் பழனி அரசு மருத்துவமனைக்கு மின்விசிறி, கட்டில், மெத்தை போன்ற உபகரணங்களையும் தலைமை மருத்துவர் உதயகுமாரிடம் வழங்கினர். இதில் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. ஆயிரம் பயனாளிகளுக்குத்தையல் மெஷின், சலவைப் பெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டன. அப்போது பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் பேசும் போது, “உதயநிதி ஸ்டாலின் மிகவும் ராசியானவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற அடித்தளம் அமைத்தார்.

Udayanithi Stalin is very favourable person ...

Advertisment

அதே போல சட்டமன்ற தேர்தலின் போதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைப்பதற்கு உதயநிதி ஸ்டாலினின் சூறாவளி பிரச்சாரம் காரணமாக அமைந்தது. உதயநிதி ஸ்டாலின் கையிலெடுத்த முதல் எய்ம்ஸ் செங்கல் திமுக ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்ததாக” கூறினார். இதில் ஏராளமான பொதுமக்களும், கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். அதன் பின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு ஐ .பி. செந்தில்குமார் மற்றும் நற்பணி மன்ற மாநில செயலாளர் பாபு ஆகியோர் பழநி மலையில் தங்கத் தேர் இழுத்து முருகப் பெருமானை வழிபட்டுச் சென்றனர்.

anbil mahesh udhayanidhistalin I.P.SENTHILKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe