Advertisment

கொடைக்கானல் டூ சென்னை; விவேக்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்..! (படங்கள்) 

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று (16.04.2021) சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

Advertisment

அவரின் மறைவுக்குப் பல்வேறு துறையினரும் இரங்கல் தெரிவித்தனர்; மேலும், நேரில் வந்து அஞ்சலியும் செலுத்தினர். இந்நிலையில், திமுக சார்பில் அக்கட்சியின்அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் ஆ. ராசா எம்.பி. ஆகியோர் காலை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் உள்ளிட்டவற்றை முடித்துக்கொண்டு, ஓய்வுக்காக குடும்பத்துடன் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளார். இவருடன் நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதியும் சென்றிருந்தார். காலை நடிகர் விவேக் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்த அவர், மாலை சென்னைக்கு வந்து நடிகர் விவேக்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

udhayanithi stalin actor Vivek
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe