Skip to main content

வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யும் திட்டத்தைத் துவங்கி வைத்த உதயநிதி! (படங்கள்)

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, முழு ஊரடங்கை அறிவித்துள்ள சூழலில், இத காலத்தில் மக்கள் வெளியே வருவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வண்டிகளில் வைத்து காய்-கனி வியாபாரங்கள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பல மாவட்டங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்து வருகின்றனர்.  அந்தவகையில், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களை அந்த தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஐஸ் ஹவுஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திலிருந்து துவங்கி வைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழுக்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும் முதல் எதிர்க்குரல் அவருடையதுதான்'-அமைச்சர் காந்தி பேச்சு

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
'The Chief Minister is the first voice against whoever raises a question against Tamil' - Minister Gandhi speech

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே திமுக கட்சியின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செய்தார்.

 

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி தெரிவிக்கையில், 'பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் தமிழ் மொழிக்காக எவ்வாறு பாடுபட்டர்களோ அதை மிஞ்சும் அளவுக்கு தமிழக முதல்வர் செயலாற்றுவதாகவும் தமிழ் மொழிக்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும் அதனை முதலில் எதிர்த்து குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய திட்டங்களை அறிவித்து இந்தியாவிலேயே முன் மாதிரியான முதல்வராக தமிழக முதல்வர் திகழ்கிறார்.தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினை மிஞ்சும் அளவிற்கு விளையாட்டு துறை அமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். விளையாட்டுத்துறை என ஒரு துறை இருந்ததே யாருக்கும் தெரியாது. தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன பிறகு விளையாட்டுத்துறை தற்போது மேலோங்கி வளர்ந்துள்ளது.

திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநாடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு நடைபெற்று முடிந்திருக்கிறது' என தெரிவித்தார்.

Next Story

“நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ம் வெற்றி பெற உழைத்திட வேண்டும்” - அமைச்சர் உதயநிதி

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Minister Udayanidhi says that we have to work hard to win the parliamentary elections

“நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ம் வெற்றி பெற வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் உழைத்திட வேண்டும்” என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.  

திருச்சியில் கலைஞர் சிலையை காணொளி காட்சி மூலம் அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். அதன்பின் பேசிய அவர், “சேலம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் எனது நன்றி. மாநாட்டை வெற்றி மாநாடாக செய்து காட்டிய கே.என். நேருவிற்கு நன்றி. கே.என். நேருவின் உழைப்பை பார்த்து நான் வியந்து போகிறேன். திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் இதுவரை 76 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.  திருச்சி தெற்கு மாவட்டம் முதன்மையாக உள்ளது.   

ad

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் விளையாட்டு போட்டிகள், கலைஞர் சிலை திறப்பு விழா, அணிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள், மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திருச்சி தெற்கு மாவட்டம் விளங்குகிறது. எனவே தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். திருச்சியில் கலைஞர் சிலையை திறந்தது எனக்கு பெருமையாக உள்ளது.

கலைஞரை முதன் முதலில் எம்எல்ஏ ஆக்கியது திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதிதான். அதனைத் தொடர்ந்து அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் கலைஞர் வெற்றி பெற்றார். கலைஞருக்கு பிடித்த ஊராக திருச்சி விளங்கியது.  திருச்சி கல்லக்குடி போராட்டம் தமிழக வரலாற்றில் முக்கியமான போராட்டமாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சி மாவட்டத்தில் கலைஞர் சிலை திறப்பது பெருமைக்குரிய விஷயம். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி ரயில் நிலையத்தில் தீக்குளித்து தமிழுக்காக தனது உயிரை அர்ப்பணித்தவர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக் கொடுத்தவர் கலைஞர். இந்த வீரவணக்க நாளில் சிலை திறப்பு நம் அனைவருக்கும் பெருமை தரக்கூடிய விஷயம்.

Minister Udayanidhi says that we have to work hard to win the parliamentary elections

பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகள் சிலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது.  தலைவர்களின் சாதனைகளை விளக்கும் வகையில் தான் சிலைகள் திறக்கப்படுகிறது. திமுக தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்த இடம் திருச்சி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ம் வெற்றி பெற வேண்டும்.  அதற்காக ஒவ்வொருவரும் உழைத்திட வேண்டும்” என்றார்.