Advertisment

உதயநிதி பிறந்த நாள் விழா: பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த இளைஞரணியினர்! (படங்கள்)

Advertisment

திமுக மாநில இளைஞரணிச் செயலாளர்உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாமுன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி, தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது. அந்தவகையில்,உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று (27/11/21) மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் தலைமையில் யோகலட்சுமி - சரவணன், பானுப்பிரியா - அருண் தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், தேசிங்குராஜா சக்திபிரகாஷ்,ரவீந்திரன், விஷ்ணுவரதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

udhayanidhistalin trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe