nagai1

கேரளா வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க நாகையிலிருந்து மீட்பு பணிக்காக திமுகவினர் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட படகு அனுப்பி உதவிக்கரம் நீட்டினர்.

கேரளா மழை வெள்ளத்திற்கு அங்குள்ள மக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். இவர்களின் துயர் துடைக்க தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் சினிமா உலகினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

n

Advertisment

அந்த வகையில் கேரள சினிமா கலையுலகினரின் கோரிக்கையை ஏற்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாகை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று கேரள மாநிலம் ஆல்வா பகுதிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடியிழை படகு நாகை துறைமுகத்தில் இருந்து லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநில மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றனர் திமுகவினர்.