Advertisment

முதல்வர் பழனிச்சாமிக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும் -உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்து இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும், மோடிக்கு இரு அடிமைகள் உள்ளனர் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம்தான்.

Advertisment

udayanidhi stalin election campaign

தற்போது தமிழகத்தில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கிடையாது, இது மக்கள் விரோத ஆட்சி. அதற்கான சாட்சிதான் இந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றி. இது சாதாரண வெற்றியல்ல சில தொகுதிகளில் 5 லட்சம் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisment

udayanidhi stalin election campaign

இந்த தொகுதி மக்களாகிய உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது, எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றால் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று முதல் பெயர் முதல் சின்னம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மிகப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள், நீங்கள் வெற்றி பெற வைப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதும் முதல் பணியாக உங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெட்டிதோப்பு மேம்பாலம் அமைத்து தரப்படும் என்று பேசினார்.

elections udayanidhistlain Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe