Udayanidhi provided financial support to Tamil Nadu players

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுன்டேஷன்' சார்பில் 6 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 30.50 இலட்சம் மதிப்பில் நிதியுதவிக்கான காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

Advertisment

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடுசாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி வழங்கினார் உதயநிதி. இந்த நிகழ்வில், சைக்கிளிங், செயிலிங், பளு தூக்குதல், கராத்தே உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கேற்று வரும் 6 வீரர், வீராங்கனைகளுக்கு ரூபாய் 30 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிதியுதவிக்கான காசோலைகள், விளையாட்டு உபகரணங்களை சென்னை முகாம் அலுவலகத்தில் வழங்கினார் அமைச்சர் உதயநிதி.

Advertisment

Udayanidhi provided financial support to Tamil Nadu players

சைக்கிளிங் வீராங்கனை செல்வி எம். பூஜா சுவேதாவிற்கு கார்பன் பிரேம் மற்றும் கார்பன் சக்கரங்களை வாங்குவதற்காக ரூ. 12,30,000, ராயல் மெட்ராஸ் யாட் கிளப்பிற்கு தேசிய செயிலிங் போட்டிகளுக்காக ரூ. 5,00,000, உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டிகளில் சீனியர், ஜூனியர் மற்றும் யூத் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் எல். தனுஷ், வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் வி. கிஷோர் ஆகியோருக்கு தலா ரூ. 50,000 வீதம் பரிசுத் தொகையும், சைக்கிளிங் வீராங்கனை கௌரி மிஷ்ராவிற்கு சர்வதேச சைக்கிளிங் போட்டிகளில் பங்குபெறுவதற்காக ரூ. 10,00,000, கராத்தே வீரர் எஸ். சாய் பிரஜன் சர்வதேச கராத்தே போட்டிகளில் பங்குபெறுவதற்காக ரூ. 2,20,000 என மொத்தம் ரூ. 30.50 இலட்சம் மதிப்பிலான நிதியுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

Udayanidhi provided financial support to Tamil Nadu players

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.