திமுகஇளைஞரணி செயலாளரும்சென்னை சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் சில தினங்கள் முன்பிருந்தே மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தனர்.
இன்று காலை முதல் உதயநிதி ஸ்டாலினுக்கு திரைத்துறையிலிருந்தும் அரசியல் வட்டாரங்களிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், “சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/440.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/441.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/442.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/443.jpg)