நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கடந்தவருடம் டிசம்பர் மாதம்ஒரே வாரத்தில், 3 பேர் 'உடைந்த கொம்புசங்கர்'என்ற ஒற்றைக் காட்டு யானையால்அடித்துக் கொல்லப்பட்டனர். தந்தையும் மகனும்உடைந்தகொம்பு சங்கரால் கொல்லப்பட்ட நிலையில், அந்த யானையைப் பிடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததை அடுத்து, அதனைப்பிடிக்க வனத்துறை சார்பில்தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தொடர் முயற்சியில் நடந்ததேடுதலில், அந்த யானைமறைந்துள்ளசேரம்பாடி பகுதி சமதளப் பகுதியாக இல்லாமல் மேடு பள்ளங்கள் நிறைந்த புதர்ப் பகுதியாக இருந்ததால், யானை மயக்கமடைந்தாலும்அதனை வாகனத்தில் ஏற்றுவது மிகவும் சவாலான காரியம் எனக் கூறிய வனத்துறையினர்,யானை மயக்கமடைய மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கமுயற்சித்தும்முடியாமல் போனது.
அதன்பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றயானையை முதல்முறையாக ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர். அப்போது உடைந்த கொம்பனைச் சுற்றி 10 யானைகள் இருந்தன. உடைந்த கொம்பனைக் கண்காணிக்ககோவை முதுமலையிலிருந்துட்ரோன் கேமராக்கள் கொண்டுவரப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வந்தநிலையில், பிடிக்க முடியாமல் போனது.பின்னர் இறுதியாகயானையைப் பிடிப்பதற்கான வனத்துறையின் திட்டம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கேரள வனப்பகுதிக்கு தப்பிச் சென்றஉடைந்த கொம்பன், ஒன்றரை மாதத்திற்குப் பிறகு தற்போது அதே நீலகிரி சேரம்பாடி பகுதிக்கு வந்துள்ளது. மூன்று பேரை கொன்றயானை மீண்டும் திரும்பியதால் சேரம்பாடி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் வந்தஉடைந்த கொம்பனைப் பிடித்து தெப்பக்காடு முகாமுக்கு அனுப்ப வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.