Advertisment

அஜித்தின் வலிமைக்கு யு/ஏ சான்றிதழ்; படத்தின் மொத்தம் நேரம் குறித்த தகவலும் வெளியானது!

kl;

Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பொங்கல் ரிலீசுக்குத் தயாராக இருந்த நிலையில் கரோனா 3ஆம் அலை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபுரோமோஷன் வேலைகளை தற்போது தொடங்கியுள்ளனர். இதற்கிடையே இந்த படத்திற்கு யு.ஏ சான்றிதழை சென்சார் போர்டு அதிகாரிகள் வழங்கியுள்ளனர். படத்தின் நீளம் 2 மணி நேரம் 58 நிமிடம் என்று தெரிய வந்துள்ளது.

valimai ajith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe