u

நீட் தேர்வினால் தற்கொலை செய்து உயிரிழந்த அனிதாவின் நினைவாக, அவரது சொந்த ஊரான அரியலூர் குழுமூரில் ’அனிதா படிப்பகம்’ அமைக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்நூலகத்திற்கு சென்று அனிதாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த படிப்பகத்திற்காக 50 ஆயிரம் ரூபாயும், ஏராளமான புத்தகங்களையும் வழங்கி, அப்படிப்பகத்தில் உறுப்பினராகவும் தன்னை இணைத்துக்கொண்டார்.

Advertisment

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, ’’திமுக தலைமை அறிவித்தால் போட்டியிட தயாராக உள்ளேன்’’என்று தெரிவித்தார்.