Advertisment

இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழப்பு

 Two youths Lose their live in two-wheeler race

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர்ப் பகுதியில் இருந்து ஆவியூர் வரை மூன்று விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வாகன பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் இருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக சைலோம் சென்று அங்கிருந்து ஆவியூர், வடக்கு நெமிலி, ஆவி.கொளப்பாக்கம் கூட்ரோடு வழியாக மீண்டும் 5 முனை சந்திப்பை வந்து அடையும் வகையில் வாகன பந்தயத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisment

இந்த வாகன ரேசின் போது, மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஆர்15 இருசக்கர வாகனத்தில் பந்தயத்தில் ஈடுபட்ட போது திருக்கோவிலூர் அடுத்த சைலோம் பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக சென்றதால் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில், வாகனத்தில் பயணம் செய்த மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த, திருக்கோவிலூர் போலீசார் இருவரது உடலையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, பின்னர் பிரேதப்பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, திருக்கோவிலூர் புறவழிச்சாலை பகுதிகளில் இதுபோன்ற இருசக்கர வாகன பந்தயங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நகர் பகுதியில் தொடங்கிய வாகனப் பந்தயத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

incident kallakurichi police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe