/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_494.jpg)
ஒடிசாவைச் சேர்ந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்களின் செயல்பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு அருகே உள்ளது வடுகபாளையம் கிராமம். இந்தப் பகுதியில்ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் பைரவா என்ற இளைஞரும்ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரும்கட்டட வேலைக்காக வந்துள்ளனர். வேலைக்கு வந்த இடத்தில் ஆகாஷிற்கும் அந்த இளம்பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் இது காதலாக மாறி இருவரும் ஆங்காங்கே சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், ஆகாஷ் அந்த இளம்பெண்ணிடம், "அவிநாசி ஏரியாவுல கட்டட வேலைக்கு ஆள் எடுக்குறாங்களாம். அங்க போயிட்டு வேலை செய்யலாமா. சம்பளமும் அதிகமா தரேன்னு சொல்றாங்க" எனஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த இளம்பெண் ஆகாஷிடம் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகுவடுகபாளையத்தில் இருந்த கட்டட வேலையை முடித்துக்கொண்டுஇருவரும் அவிநாசிக்கு வந்தடைந்த நிலையில், ஆகாஷ் அந்த இளம்பெண்ணை அவிநாசியில் தங்கியுள்ள தனது நண்பரான விரேந்தர் மீனா என்பவரின் அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
புது இடம்,புதிய முகம் என்று அந்த பெண் சிறிது பதற்றமடைந்த நேரத்தில்,ஆகாஷும் அவரது நண்பரும் மது அருந்தியுள்ளனர். அந்த சமயம், இருவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில், அந்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டுஅவிநாசியிலிருந்து அழைத்து வந்து திருப்பூர் செல்லும் சாலையில் தனியாக இறக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். அப்போதுமிகுந்த சோர்வுடன்இருந்த அந்த பெண்அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்அந்தப் பெண்ணை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்துஅந்த இளம்பெண் சிறிது தெளிவான பிறகுஇச்சம்பவம் குறித்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில்ஆகாஷ் பைரவா மற்றும் அவரது நண்பர் விரேந்தர் மீனா ஆகியோரை கைது செய்த மகளிர் போலீசார்அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us