Two women rescue from trichy massage center

Advertisment

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக திருச்சி செஷன்ஸ் கோர்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களை மீட்டனர். அவர்களை இதில் ஈடுபடுத்திய மதுரையைச் சேர்ந்த அருண்பாண்டியன்(25), பால்பாண்டி(44) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மீட்கப்பட்ட இரண்டு பெண்களையும் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.