Skip to main content

சிதம்பரம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து இரு பெண்கள் உயிர் இழப்பு

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

சிதம்பரம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து கூலி வேலைக்கு சென்ற இரு பெண்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் 16க்கும்  மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


 

Two women lost their lives near Chidambaram

 

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு அருகே உள்ள சேந்திரகிள்ளை கிராமத்தில் இருந்து சிதம்பரம் அருகே உள்ள அகரநல்லூர் கிராமத்திற்கு விவசாய கூலி வேலைக்கு 16 பெண்கள் உள்ளிட்ட 22 பேருக்கு மேற்பட்டவர்கள் லோடு ஆட்டோவில் சனிக்கிழமை காலை பயணம் செய்துள்ளனர்.  வாகனம் சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சென்றுகொண்டு இருந்த போது ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து  கவிழ்ந்துள்ளது. வாகனம் கவிழ்ந்ததில்  சம்பவ இடத்திலேயே காசியம்மாள்(55) விவசாய கூலி தொழிலாளி உயிர் இழந்துள்ளார்.  

விபத்தை கண்ட அருகில் உள்ளவர்கள் அனைவரையும் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ராஜா முத்தை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுதா(52) என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.  மேலும் 16 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
 

Two women lost their lives near Chidambaram

 

காலை நேரத்தில் இந்த கிராமத்தில் இருந்து பேருந்து போக்குவரத்து குறைவாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இது போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் சேந்திரகிள்ளை பகுதியில் இருந்து அகரநல்லூருக்கு சென்றுவர ஒரு நபருக்கு பேருந்து கட்டணம் ரூ.50 ஆகிறது. எங்களுக்கு கிடைக்கும் கூலியே ரூ200 தான் அதனால் தான் நாங்க இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு லோடு ஆட்டோவை ரூ.400 க்கு அமர்த்தி கொண்டு பயணம் செய்தோம். இப்படி கவிழ்ந்து விபத்துகுள்ளாகி உயிரை மாய்த்துக்கொள்வோம் என்று நினைத்துகூட பார்க்கவில்லை என்கிறார் கூலிவேலைக்கு சென்ற அரும்பு என்ற பெண்.

சார்ந்த செய்திகள்

Next Story

உழைக்கும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஆரி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
aari arjunan gift to 10 working womens

நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.

aari arjunan gift to 10 working womens

எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2  பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.

Next Story

"பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும்" - ஆளுநர் தமிழிசை

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

tamilisai soundararajan request women came into politics

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள சென்றான்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் இரண்டாம் ஆண்டு  பட்டமளிப்பு விழா நேற்று (28.04.2023) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

 

விழாவில் அவர் பேசுகையில், ‘‘பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலம் அரசியல் தூய்மை அடையும். பெண்கள் அரசியலை தனக்கான துறை இல்லை என்று ஒதுங்கி இருக்கக் கூடாது. பெண்கள் அதிக அளவில் சவால்களைச் சந்திக்க மன தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை. ஆண்களை விட பெண்கள் தற்போதும் அதிக அளவில் சவால்களைச் சந்தித்து வருகிறார்கள். மாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து அரசியல் செய்தால் தான் பிரச்சனை. வெளியே சென்று அரசியல் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று பேசினார்.

 

பட்டமளிப்பு விழாவுக்கு பின்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்த செய்தியாளர்கள், தமிழக ஆளுநர் குறித்தும் ஆளுநர்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவது குறித்தும் கேள்வி எழுப்பிய போது, "தமிழக ஆளுநர் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அந்தந்த ஆளுநர்கள் மசோதாக்களில் கையெழுத்திடுவதில் அவர்கள் சட்டத்தை எப்படி கையாளுகின்றனர் என்பதை பொறுத்து காலதாமதமாகிறது" என்று தெரிவித்தார்.