/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nife.jpg)
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள பேகம்பூரில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களே வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள யூசுப் நகரில் சாகுல் அமீது என்பவர் டீகடை வைத்து இருக்கிறார். இவருடைய மருமகள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இறந்து இருக்கிறார். இதனால் சம்மந்தி வீட்டுக்கும் யூசுப் வீட்டுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்த நிலையில் தான் திடீரென சில மர்ம நபர்கள் கத்தியுடன் யூசுப் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த யூசுப் மற்றும் பரகத்நிஷா, கொலுசம்பீ ஆகியோரை சரமாரியாக குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரகத்நிஷாவும், கொலுசம்பீபீயும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சாகுல்அமீதை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதோடு அந்த மர்ம நபர்கள் சம்பவ இடத்திலிருந்து வெளியே தப்பித்து ஓடும் போது அவ்வழியாக வந்த ஒரு நபரையும் இந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டு ஒடிவிட்டனர். தற்பொழுது அந்த நபரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பேகம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)