கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள திடீர் குப்பம் பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு இவருடன் பணியாற்றிய 21 வயது இளம் பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தோழிகளாக நெருங்கி பழகி வந்தனர். இவர்கள் அப்பகுதியில் தனி அறைஎடுத்து ஒன்றாக தங்கி மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடீர் குப்பத்தைச் சேர்ந்த பெண் தனது சினேகிதி உடன் வீட்டுக்கு வந்துள்ளார். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் தோழிகள் இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். அதேசமயம், சென்னையைச் சேர்ந்த பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணை காணவில்லை என சென்னை, நெல்லிக்குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் நேற்று முன்தினம் இரண்டு பெண்களையும் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு பெண்களும் சென்னையில் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக இருந்து வருவதாக கூறியுள்ளனர். இதை கேட்டு பெண்களின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கை எப்படி விசாரிப்பது என குழப்பம் அடைந்த போலீசார் மறுநாள் விசாரணைக்கு வருமாறு கூறி அனைவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.