புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் பஸ்களின் மூலம் மது பாட்டில்கள் கடத்துவது என்பது தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகிறது. காவல்துறையும் அப்படி கடத்துபவர்களை அவ்வப்போது பிடித்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி வருகிறது. ஆனாலும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

Advertisment

two women arrested

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மொளசூரை சேர்ந்த வள்ளி, ஆயத்துறை சேர்ந்த மேரி ஆகிய இரு பெண்களும் 340 மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளனர். இவர்களைப் பார்த்து சந்தேகமடைந்த எஸ்ஐ கலையரசன் பிரகாஷ் ஆகியோர் இவர்களிடம் பெண் போலீசாரைக் கொண்டு சோதனை நடத்தியதில் மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையை சேர்ந்தவர்கள் நம்மிடம் கூறும்போது, "உயிரை குடிக்கும் மதுவை பெண்களே கடத்தி வந்து விற்பனை செய்வது வேதனையாக உள்ளது. இப்படிப்பட்டவர்களைக் கையும் களவுமாக பிடித்து அவ்வப்போது வழக்குப் போட்டாலும் கூட நீதிமன்றம் மூலம் ஜாமினில் வந்து மீண்டும் மீண்டும் மதுபாட்டில்கள் கடத்தி வருகின்றனர். இதற்காகவே மாவட்டத்தில் பலரை குண்டர் சட்டத்தில் கூட சிறைக்கு அனுப்பி உள்ளோம். அதையும் மீறி கூட மது கடத்தல் தொடர்கிறது. அது எங்களால் முடிந்த அளவு கட்டுப்படுத்தி வருகிறோம்" என்கிறார்கள்.