ADVERTISEMENT

பைக்கில் துரத்திச் சென்று திருடனைப் பிடித்த பெண்ணுக்கு போலீசார் பாராட்டு

03:13 PM Mar 18, 2020 | rajavel

ADVERTISEMENT

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தீபக் ராஜேஷ் மனைவி நந்தினி. இவர் கடந்த 13.03.2020 வெள்ளிக்கிழமை இரவு 11:00 மணியளவில் தனது குழந்தையுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர், அந்த நந்தினியின் கழுத்தில் இருந்த சுமார் இரண்டரை சவரன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு வேகமாகச் சென்றார்.

ADVERTISEMENT


>
நந்தினியும் அவன் பின்னாலேயே தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திக் கொண்டு சென்றார். அப்போது பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில் அருகே குற்றவாளி கீழே விழுந்துள்ளார். நந்தினி அப்போது திருடன் எனக் கூச்சலிட்டுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அவனை மடக்கிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.


அவன் மீது கே1 செம்பியம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவனை விசாரித்ததில் அவனது பெயர் சுல்தான் அலாவுதீன் எனத் தெரிய வந்தது. சென்னை பெரம்பூர் மடுமா நகர், சின்ன குழந்தை இரண்டாவது தெருவைச் சேர்ந்த அவன் மீது இதுபோல் கே5 பெரவள்ளூர் காவல் நிலையயத்திலும் வழக்கு உள்ளது எனத் தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இரண்டு வழக்குகளின் குற்றச் சொத்தான சுமார் 3 சவரன் தங்க நகைகள் முழுவதுமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நகைப் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியைத் தைரியமாக துரத்திச் சென்று பிடித்த நந்தினியை சிறப்பிக்கும் விதமாக இன்று சென்னை மாநகர கூடுதல் ஆணையர் முனைவர் இரா.தினகரன், இ.கா.ப. பரிசு வழங்கி பாராட்டினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT