/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/35_117.jpg)
சிதம்பர நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் சிதம்பரம் டிஎஸ்பி உள்ளிட்டோரின் உத்தரவின் பேரில் சிதம்பரம் குற்றப்பிரிவு உதவியாய் பல சுரேஷ் முருகன் தலைமையிலான காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் திருடப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தபோது நெய்வேலி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், வடலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனர். திரட்டப்பட்ட வாகனங்களின் மதிப்பு ரூபாய் 6 லட்சம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)