Published on 21/12/2021 | Edited on 21/12/2021

திருச்சி திருவெறும்பூர் குற்றபிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நவல்பட்டு பகுதியில் வாகனம் ஓட்டிவந்த ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா (வயது 36) என்பதும், அவர் ஓட்டிவந்தது திருட்டு வாகனம் என்றும் தெரியவந்தது. மேலும், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 20 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.