Advertisment

பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு... சிசிடிவி காட்சி அடிப்படையில் ஒருவருக்கு வலைவீச்சு!

Two-wheeler theft in broad daylight ... web for someone based on CCTV footage!

Advertisment

சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருடப்பட்ட சம்பவத்தில் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சந்தைமேடு பாவேந்தர் தெருவைச் சேர்ந்த மணல் லாரி உரிமையாளர் கணேஷ். இவர் நேற்று மதியம் அவரது ஸ்கூட்டரை வீட்டு வாசலில் நிறுத்தி பூட்டிவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரானது காணாமல் போயுள்ளது. இதனையடுத்து கணேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை திருடிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சி அடிப்படையில் ஸ்கூட்டரை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe