Advertisment

முதலில் மனுசங்களை அடிச்சாங்க! இப்போ வண்டி மேல காரை ஏத்துறாங்க! பொதுமக்கள் புகார்!

இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், முசிறியில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்தார்கள் என முசிறி காவல் உதவி ஆய்வாளர் ரவி, பொதுமக்களின் வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்தார். இதில் பலரும்அத்தியாவசிய தேவைக்காக மருத்துவமனை, பால், விவசாயிகள் உரம் வாங்க, வெளியில் வந்தவர்கள் என்பதும்,உரியகாரணம் மற்றும்ஆவணங்களைக் காட்டிய பிறகும்கூட அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

musiri

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அப்போது அங்கு வந்த காவல்நிலைய ஆய்வாளர் பால்ராஜ் அனைவருக்கும் கரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு வண்டியை அனுப்பிடுங்க என்று சொல்லிட்டு கிளம்பிட்டார். ஆனால் காவல் உதவிஆய்வாளர் ரவி காவல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் மீது தன்னுடைய சொந்த காரை எடுத்து அந்த வண்டிகளை இடித்து தள்ளியுள்ளார். இதனால் பொதுமக்களின் வாகனங்கள் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாகனங்களை பெற வெகு அளவிலான பொது மக்கள் காவல் நிலையத்தின் முன் கூடியுள்ளனர்.

ஆனால் காவல் உதவி ஆய்வாளர் ரவி வாகனங்களை தர வாகன உரிமையாளர்களிடம் ரூ.2000 பணம் கேட்டுள்ளார். இத்தகவல் காவல் ஆய்வாளர் பால்ராஜ் அவர்களுக்கு தெரியப்படுத்த ரோந்து பணியில் இருந்த ஆய்வாளர் காவல் நிலையம் சென்று அங்கு இருந்து வாகன ஓட்டிகளிடம் விசாரித்துள்ளார்.

musiri

விசாரணையில் பணம் கேட்டது, வாகனங்களை சேதப்படுத்தியது தெரிய வர உதவி ஆய்வாளர் ரவியை அழைத்து கரோனா பற்றிய விழிப்புணர்வு கொடுத்து வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கச்சொன்னால் யார் உத்தரவுப்படி வாகனங்களை காவல் நிலையத்தில் வைத்து சேதப்படுத்தினீர்கள் என பொது மக்கள் முன்பு ஏகவசனம் பாடியுள்ளார்.

பின்பு வாகன உரிமையாளர்களிடம் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து வாகனங்களை ஒப்படைத்தனர் முசிறி காவல்துறையினர்.

corona virus damage musiri Two wheeler
இதையும் படியுங்கள்
Subscribe