விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் மேம்பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 60 அடி உயர பாலத்தில் இருந்து அந்த நபர் கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ulundurpet 4444.jpg)
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். இறந்தவர் யார் என விசாரணை செய்து வந்தனர். இதற்கிடையே இறந்தவர் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த சகாயம் என்பதும், அவருக்கு வயது 55 என்பதும் தெரியவந்தது.
Follow Us