திருச்சி மாவட்டம், லால்குடி கீழவாளாடியைச் சேர்ந்தவர் மந்திரிகுமார்(53). இவர், வையம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றி வருகிறார். மந்திரிகுமார், பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மரவனூார் அருகே, மணப்பாறை கலிங்கப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன்(39) என்பவர் எதிரே பைக்கில் வந்துள்ளார்.
சந்திரசேகரனின் வாகனம், எதிர்பாராத விதமாக மந்திரிகுமார் வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், மந்திரிகுமார் படுகாயம் அடைந்தார். அப்போது, அப்பகுதியினர் மந்திரிகுமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்துவந்த மந்திரிகுமார், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.