Advertisment

வீரப்பன் கூட்டாளிகள் இருவர் விடுதலை

Two of Veerappan's accomplices were acquitted

கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்தவீரப்பன் கூட்டாளிகள் இரண்டு பேர்,தமிழ்நாடு அரசின் பரிந்துரையின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். அண்ணா பிறந்த நாளையொட்டி ஆண்டியப்பன் மற்றும் பெருமாளை விடுவிக்குமாறு அரசு விடுத்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக்கொண்டார்.

Advertisment

சத்தியமங்கலம் வனச்சரகத்தில் 1987ம் ஆண்டு ரேஞ்சர் சிதம்பரம் மற்றும் அவருடன் சென்றவர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கை ஈரோடு பங்காளப்புதூர் காவல்துறையினர் விசாரித்தனர். இந்தக் கொலை வழக்கில் வீரப்பன் அண்ணன் மாதையன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு நீதிமன்றத்தில் மூவருக்குமே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கோவை மத்திய சிறையில் இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டு இருந்தனர்.

Advertisment

சில ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் அண்ணன் மாதையன் என்பவர் பாதுகாப்பு காரணங்களுக்காகச் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு மாதையன்உயிரிழந்து விட்டார். இதனையடுத்து கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் ஆண்டியப்பன்(53), பெருமாள்(59) ஆகியோர் நன்னடத்தைக் காரணமாகவும் கருணை அடிப்படையிலும் விடுதலை செய்ய வேண்டும் எனத்தமிழக அரசு விடுத்த பரிந்துரையினை ஏற்று ஆளுநர் கையெழுத்திட இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Veerappan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe