air

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது கந்தாஸ்ரமம் அருகே சென்னை ஆவடியை சார்ந்த பிரபாகரன் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் ஆகிய இருவரும் மலை மீதேறி பாதி மலையில் இருந்து ஆளில்லா குட்டி விமானத்தை பறக்கவிட்டு நகரத்தை படம் எடுத்துள்ளனர்.

Advertisment

இதனை அப்பகுதி சாதுக்கள் பார்த்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலிஸார் அங்கு உடனடியாக வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அனுமதி இல்லாமல் ஆளில்லா விமானத்தை பறக்க விட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

Advertisment

air

மலை மீதோ, நகரத்தையோ அனுமதியில்லாமல் ஆளில்லாத விமானத்தின் மூலம் படம் எடுப்பதை தடை செய்துள்ளது திருவண்ணாமலை காவல்துறை.

இதுக்குறித்து எஸ்.பி பொன்னிக்கு தகவல் தெரிவித்தனர். அவரின் உத்தரவுப்படி பிரபாகர் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஆளில்லா விமானம் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். அவர்களை நகர காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து எதற்காக படம் எடுத்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் பின்னணி குறித்தும் உளவுத்துறை போலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisment