Advertisment

உயிரிழந்து கிடந்த இரண்டு புலிகள்; வனத்துறை விசாரணை

Two tigers; Forest Department investigation

Advertisment

நீலகிரி மாவட்டம் உதகை அருகே இரண்டு புலிகள் உயிரிழந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புலிகள் இறந்து கிடந்த பகுதிக்கு அருகே பசுமாடு ஒன்றும் உயிரிழந்து கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. விஷம் வைத்து விலங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம்,அவலாஞ்சி நேரு நகர் பகுதியில் ஒரு புலியும் மற்றொரு வனப்பகுதியில் ஒரு புலியும் இறந்து கிடந்தது தொடர்பான தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இந்த பகுதிகளுக்கு அருகே மாடு ஒன்றும் இதேபோல் உயிரிழந்து கிடப்பது வனத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களால் விஷம் வைத்து விலங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில் வனத்துறை 20 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

nilgiris tiger
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe