Advertisment

ஏழரை சவரன் நகை திருடிய ஆசாரி உள்பட 2 பேர் கைது!

கடந்த 16.05.2019 அன்று புதுச்சேரி வி.பி.சிங் நகரை சேர்ந்த கருணாநிதி (64) என்பவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் வீட்டு அலமாரியில் வைத்திருந்த பிரேஸ்லேட், செயின், நெக்லஸ், மோதிரம் ஆகிய ஏழரை சவரன் தங்க நகைகளை திருடர்கள் வீட்டிலிருந்து திருடியதாக குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

thief

அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது சம்பந்தமாக புதுச்சேரி மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபூர்வ குப்தா உத்தரவின் பேரில், காவல் கண்காணிப்பாளர் (வடக்கு) ஜிந்தா கோதண்டராம் மேற்பார்வையில் மேட்டுபாளையம் போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்தின் பேரில் கருணாநிதி வீட்டில் ஆசாரி வேலை செய்து வந்த புதுச்சேரி சண்முகாபுரம், வினாயகர் கோவில் தெருவில் வசிக்கும் ரவி என்பவரின் மகன் விஜய் (24) என்பவரையும், அவருடன் வேலை செய்துவந்த இளம் சிறார் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்ததில் அவர்கள் மேற்படி திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டனர். அதனடிப்படையில் ரூபாய் 2,00,000 மதிப்புள்ள திருட்டு போன நகைகளை கைப்பற்றினர்.

thief
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe