Advertisment

இரண்டு வாலிபர்களை கொலை செய்த கஞ்சா விற்பனை கும்பல்!

 two teenagers passes away by Cannabis gang

கோவையில் கஞ்சா விற்பனை கும்பல் இரண்டு வாலிபர்களை இன்று காலை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். கோவை நகரில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை கும்பல் அதிகரித்துள்ளது. இதில் தொழில் போட்டி காரணமாக ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கஞ்சா விற்கும் கும்பல் இளைஞர்கள், இளம்பெண்களை இந்த தொழிலில் வியாபாரிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்கிற செய்திகள் வெளியாகின.

Advertisment

கடந்த மாதம் கூட காளபட்டி பகுதியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், கல்லூரி மாணவர் ஒருவரும கஞ்சா விற்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டனர். இந்நிலையில் இன்று கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கஞ்சா வியாபாரிகள் இரண்டு வாலிபர்களைக் கத்தியால் வெட்டி விட்டுத் தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

Advertisment

passes away Youth Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe