Advertisment

காவலராக பணிபுரியும் தந்தை மீது 10 வயது மற்றும் 15 வயது நிரம்பிய இரு மகன்கள் புகார்.

police

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ. இவருடைய மனைவியும் பேரூர் பகுதியில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ப்ரத்யூம்னா ( 15 ) மற்றும் ஹேமந்தரா ( 10 ) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் போத்தனூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் , தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட தந்தை செய்து கொடுக்க மறுப்பதாகவும் , சரியாக வீட்டிற்கு வராமலும் , குடும்பத்தை கவனிக்காமலும் இருப்பதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரு மகன்கள் வந்து புகார் மனு கொடுத்தனர்.

Advertisment

தந்தையின் இச்செயல்களால் என்னுடைய மனமும் , தனது தம்பியும் மனமும் மிகவும் பாதிக்கப்படைந்துள்ளதாகவும் , இதனால் படிப்பில் தங்களால் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது , புகார் மனு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இது குறித்து இளங்கோவிடம் விளக்கம் பெற பல முறை முயற்சி செய்யப்பட்டது , ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.காவல் பணியில் ஏற்பட்டவேலை பளு காரணமாகவும் இருக்கலாம் இப்படி அவர் இருந்திருக்கலாம் எனவும் அவரை சேர்ந்த உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment
tn police police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe