Advertisment

இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட நீயா? நானா? போட்டியில் வாலிபர் குத்தி கொலை

Advertisment

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட போட்டியில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தென்னூா் வாமடம் பகுதியைச் சோ்ந்த விஜயன் (18), பெயிண்டா் தொழில் செய்துவருகிறார். இவா் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றவழக்குகள் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த விஜயன், நேற்று வாமடம் பகுதியில் தன்னுடைய நண்பா்களுடன் நின்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவா்களுக்குள் அடிதடி நடந்துள்ளது.

இந்தத் தகவல் கிடைத்த தில்லைநகா் காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அவா்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளனா். இந்நிலையில், இன்று மதியம், வீட்டில் இருந்த விஜயனை தேடி வந்த, கும்பல் ஒன்று அவரை கொல்ல முயற்சி செய்தபோது, அவா் தப்பி ஓடியுள்ளார்.

Advertisment

இருப்பினும் அந்தக் கும்பல் அவரை துரத்திச் சென்று, கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனா். இதில் விஜயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை குத்தி கொன்ற கும்பல் அங்கிருந்துதப்பிச் சென்ற நிலையில், காவல்துறையினா் இருவரை கைது செய்தனர். மேலும் அவா்களிடம் தொடா்விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வாமடம் பகுதியில் யார் பெரியவன் என்ற போட்டி அங்குள்ள விஜயனின் நண்பா்களுக்குள் ஏற்பட்டுள்ளது.

cnc

இதில் விஜயனுக்கும், மற்ற நண்பா்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு, முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக காவல்துறையினா் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும், விஜயனின் உடலைக் கைப்பற்றிய தில்லைநகா் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்ததோடு தப்பிச் சென்ற கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

Police investigation incident trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe