Advertisment

குளத்தில் விழுந்த பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

Two school students passed away in the pool

Advertisment

திருச்சி எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகர், மாதா கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரஹீம் மகன் சையது கமருதீன் (11), அதே பகுதியைச்சேர்ந்தவர் பீர்முகமது மகன் முகமது ஆதில் (6). அருகருகே வீட்டைச் சேர்ந்த இருவரும் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த இருவரும், வீட்டிலிருந்த யாரிடமும் விவரம் கூறாமல் வெளியே சென்றுவிட்டனர். மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடி உள்ளனர். சுற்றுப்புற பகுதிகளில் எங்கு தேடியும் இருவரையும் காணவில்லை.

இந்நிலையில் புதுக்கோட்டை சாலை இடையே உள்ள அரை வட்டச் சாலை பகுதியில் சாத்தனூர் பெரிய குளம் அருகே தேடிச் சென்றபோது, குளத்துக் கரையில் இருவரது சைக்கிள்களும், அவர்களது ஆடைகளும் கிடந்துள்ளன. இதனையடுத்து சந்தேகம் கொண்ட உறவினர்கள் திருச்சி தீயணைப்புத்துறைக்குத்தகவல் கொடுத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து குளத்தில் தேடுதல் மேற்கொண்டனர். இதில் இருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe