Advertisment

திருச்சியில் அடுத்தடுத்து பள்ளி மாணவிகள் மாயம்..!

Two school students missing in Trichy ..!

திருச்சி மவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிவகாமி(37) ஊரடங்கு காரணமாக தற்போது தாராநல்லூர் அலங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார். அவர் பூக்கொல்லை பகுதியில் உள்ள ஆயுர்வேத கடையில் பணியாற்றி வருகிறார். மண்ணச்சநல்லூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவரின் மகள் கார்த்திகா(16) வீட்டிலிருந்து வந்துள்ளார்.

Advertisment

சிவகாமி வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது, பள்ளி மாணவி கார்த்திகாவை காணவில்லை. இது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகாவை தேடி வருகின்றனர்.

Advertisment

அதேபோல், திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா(37). இவரின் மகள் பிரியதர்ஷினி(19) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், வீடு திரும்பவில்லை. இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினி தேடி வருகின்றனர்.

SCHOOL STUDENTS trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe