Advertisment

பள்ளி மாணவிகள் இருவர் மாயம்!!! தீவிர தேடலில் போலீஸ்...

Two school student missing... police investigation

கள்ளக்குறிச்சி நகரிலுள்ள ராஜகணபதி தெருவை சேர்ந்த வர்ஷினி பிரியா (வயது 16). வள்ளலார் தெருவை சேர்ந்த திவ்யதர்ஷினி (வயது 15). இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். இதனால் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என்று வர்ஷினி பிரியாவின் தந்தை ராஜேந்திரன் மகளை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த வர்ஷினி பிரியா, தனது தோழி திவ்யதர்ஷினி உடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இருவரும் மாலை வரை வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பெரிதும் அச்சம் அடைந்த அவர்களது பெற்றோர்கள், பல் வேறு இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்துள்ளனர்.

Advertisment

இருவரும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் காணாமல் போன பள்ளி மாணவிகள் இருவரையும் கண்டுபிடிப்பதற்கு தீவிரமாக தேடி வருகின்றனர்.

kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe