Advertisment

நீரில் மூழ்கி பள்ளி மாணவிகள் மரணம்! 

Two school child passed away

Advertisment

திருச்சி மாவட்டம், செங்குடி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் சத்யா(13). இவர்களின் உறவினர் வரதராஜ் என்பவரின் மகள் தனுஷ்கா(14). இவர்கள் இருவரும் திருவெள்ளறை அரசு மேல் நிலைப்பள்ளியில் 7, 8ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் அருகில் உள்ள சிங்க குளத்தில் பள்ளி சீருடையை துவைத்து விட்டு குளித்து வர சென்றுள்ளனர். ஆனால், வெகு நேரமாகியும் திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் குளத்து பகுதிக்கு சென்று தேடி உள்ளனர். சந்தேகம் வலுக்கவே, குளத்து நீரில் மூழ்கி அப்பகுதியினர் தேடி உள்ளனர். அப்போது நீரில் மூழ்கிய நிலையில் உயிரற்ற இரண்டு மாணவிகளின் சடலங்கள் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லுார் போலீசார் உடல்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe