மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர்கள் இருவர் கைது

two professors arrested madurai

மதுரை செக்கானூரணியில் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் இருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ளது கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி. இக்கல்லூரியில் ஊரக வளர்ச்சித் துறையின் பேராசிரியர் ஜெகன் கருப்பையா கடந்த 8 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.இவர்அவரது வகுப்பில் முதலாம் ஆண்டு பயின்று வந்த 17 வயது மாணவி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி மதுரை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி தலைமையில் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக இன்று காலை பேராசிரியர் ஜெகன் கருப்பையாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மற்றொரு பேராசிரியரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

madurai police
இதையும் படியுங்கள்
Subscribe