/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3871.jpg)
நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் இரண்டு காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வீர் சிங்-ஐ பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் வரும் ஏப்ரல் 3ம் தேதி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில், கல்லிடைக்குறிச்சி காவலர் ராஜ்குமார் மற்றும் விக்கிரமசிங்கபுரம் காவலர் போகபூமன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Follow Us