Advertisment

ஊரடங்கால் வீட்டிலிருந்த மாணவி; தொடர் வன்கொடுமையில் ஈடுபட்ட உறவினர்!

Two POCSO Case registered in erode district on same day

Advertisment

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த பாசூர் அருகே உள்ள பனங்காட்டு புதூர் என்ற கிராம பகுதியில் ஒரு கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 17 வயதில் ஒரு மகளும், அடுத்து இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன்கள் இருவரும் தொடக்கப் பள்ளியில் படிக்கிறார்கள். கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்கு காலையில் சென்று மாலையில் வீடு திரும்புவார்கள்.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவர்களின் மகளான அந்த 12ம் வகுப்பு மாணவி திடீரென வீட்டில் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு போகலாம் என அழைத்தபோது அந்த மாணவி மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டார். அவரது தாயார் மகளை தனியாக கூட்டிச் சென்று கேட்ட போது, தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதைக் கேட்டு அவரது பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர். அவரது பெற்றோர் மேலும், விசாரித்தபோது அதே ஊரைச் சேர்ந்த இவர்களின் உறவினர் மகனான 22 வயது தாமோதரன் என்பவர் தான் இவர்களது மகளின் இந்த நிலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

கரோனா காலகட்டத்தில் சென்ற ஆண்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இந்த மாணவியிடம், தாமோதரன் பழகி உள்ளார். மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்றதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமோதரன் அடிக்கடி மாணவி வீட்டுக்கு வந்து அவருடன் நெருங்கிப் பழகி மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் காரணமாகவே மாணவி கர்ப்பமானது தெரிய வந்ததுள்ளது. பெற்றோர் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் கொடுமுடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்துள்ளார்கள்.

Erode POCSO
இதையும் படியுங்கள்
Subscribe