Two persons, including a policeman, were arrested in the robbery case

சென்னையில் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்ததாக எழுந்த புகாரில் காவலர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

சென்னை கீழ்பாக்கத்தில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதிஅசாத் என்பவரிடம் 5.50 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நடத்தப்பட்டவிசாரணை அடிப்படையில் பொன்னேரி காவல் நிலைய காவலர் சார்லஸ் (36) மற்றும் அவரது நண்பர் ராமச்சந்திரன் ஆகியோரை கீழ்ப்பாக்கம் போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.

Advertisment

வழிப்பறி சம்பவத்தில் காவலரே கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.