Advertisment

சீனாவிலிருந்து தமிழகம் வந்த இருவருக்கு கொரோனா உறுதி

Two persons came Tamil Nadu from China have been positive corona virus

சீனாவில் இருந்து தமிழகம் வந்த இருவருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகசீனா, ஜப்பான், தைவான், தென்கொரியாஉள்ளிட்டநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கட்டாயமாகஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், சீனாவில் இருந்து தமிழகம் வந்த இருவருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை ஏர் லங்காவிமானம் 70 பயணிகளுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளுக்கு பரிசோதனை செய்ததில் பிரதீபாஎன்ற பெண்ணுக்கும் அவரது 6 வயது மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Advertisment

பிரதீபா தனது கணவர் மற்றும் மகளுடன் சீனாவில் இருந்துள்ளார்.அவரது கணவர் வேலைநிமித்தமாக வேறொரு நாட்டிற்குச் சென்றதால், தனது மகளுடன் சீனாவில் இருந்து ஸ்ரீலங்கா வழியாக தமிழகத்திற்கு வந்துள்ளார். தற்போது அவருக்கும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளத்தில்உள்ள அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

china rtpcr madurai Medical
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe