Advertisment

ஈரோட்டில் வட மாநில இளைஞர்கள் இருவர் கொலை!

ஈரோடு அருகே வடமாநில இளைஞர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ளது மேட்டுப்பாளையம் இங்கு ரமேஷ் என்பவரின் விசைத்தறி கூடம் செயல்பட்டுவருகிறது இந்த தொழில் கூடத்தில் தொழிலாளர்களாக கடந்த இரண்டு வருடமாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திர குமார் வர்மா நவீன்குமார் ரவீந்திர குமார் மற்றும் ரஞ்சன் ஆகிய 4 பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Advertisment

இதில் மூன்று பேர் தறி குடோனிலேயே தங்கி வேலை பார்க்கிறார்கள் நேற்று விடுமுறை தினம் என்பதால் இளைஞர்கள் மூன்று பேரும் மது அருந்தியும் கஞ்சா போன்ற போதை மருந்துகளும் சாப்பிட்டு உள்ளார்கள் இந்த நிலையில் இன்று காலை தனது தறி குடோனுக்கு வந்தார் உரிமையாளர் ரமேஷ் அப்போது 2 இளைஞர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் போலீசார் வந்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் அதில் இறந்தவர்கள் சுரேந்திர குமார் மற்றும் வர்மா நவீன் குமார் என்பது தெரியவந்தது.

Advertisment

இந்த இருவரையும் ரவீந்தர் குமார் என்ற மற்றொரு நபர் கொலை செய்துள்ளதாக போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளார்கள் கொலைக்கான காரணம் பெண்கள் தொடர்பான பிரச்சனையா அல்லது போதை சம்பந்தமான பிரச்சனையா என போலீசார் விசாரித்து வருகிறார்கள் இந்த வடமாநில இளைஞர்கள் கொலையானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

youth murders
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe