Advertisment

பாறைக்கு வைத்த வெடி வெடித்து இருவர் படுகாயம்!

Two people were injured  near viluppuram

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள சிந்திபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது விவசாய நிலத்தில் உள்ள பாறைகளை வெடி வைத்துத் தகர்த்துவிட்டு அதில் விவசாயம் செய்வதற்காக ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக கோட்டம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன், செட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை ஆகிய இருவரையும் அழைத்துவந்துள்ளார். அவர்கள் இருவரும் பாறையைத் துளைத்து அதனுள்ளே வெடி மருந்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென பாறைக்கு வைக்கப்பட்ட வெடி வெடித்துச் சிதறியுள்ளது. அதில் முருகன், சின்னதுரை ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இருவரும் உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டுசென்று சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe