nn

திருவள்ளூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் மயங்கியநிலையில், அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இறுதியில் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் உள்ள கழிவுநீர் தொட்டியைசுத்தம் செய்வதற்காக இரண்டு தூய்மை பணியாளர்கள் வந்திருந்தனர். பேரூராட்சி தூய்மை பணியாளர்களான கோவிந்தன், ஒப்பந்த தொழிலாளர் சுப்பராயலு ஆகியோர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயுதாக்கிமயக்கம் அடைந்தனர்.

Advertisment

இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மயங்கி விழுந்த இரண்டு துப்புரவுபணியாளர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் கோவிந்தன், சுப்புராயுலு ஆகியோர் உயிரிழந்த நிலையில்இருவரின் உடல்களையும்தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.