Two people loses theri livetrying to pick up a bike that fell into a well

Advertisment

கன்னியாகுமரியில் கிணற்றுக்குள் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலிங்கம். செங்கல் சூளை தொழிலாளியாக இருந்த ஸ்ரீ லிங்கம் கிணற்றில் விழுந்த பைக்கைஎடுப்பதற்காக கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதற்கு பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவனையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

இந்தநிலையில் இருவரும் கிணற்றுள் இறங்கி பைக்கை மீட்க முயன்ற போது பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்ததால் தண்ணீரில் ரசாயன கலப்பு ஏற்பட்டு மூச்சு திணறி உயிரிழந்தனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுள் இறங்கி ஸ்ரீலிங்கம் மற்றும் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

பைக்கை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய இருவர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.