சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள திருப்பாச்சேத்தியை அருகிலுள்ள ஆவரங்காடு - கச்சநத்தம் கிராமங்களைச் சேர்ந்த இரு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கச்சநத்தம் கிராமத்தில் நேற்று நடந்த கோவில் திருவிழாவில் இருபிரிவினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை வழி மறித்து, ஆவரங்காடு கிராம இளைஞர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.
அத்துடன், இரவு நேரத்தில், கச்சநத்தம் கிராமத்தினுள் புகுந்த மற்றொரு சமூக இளைஞர்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மருதுபாண்டி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுரேஷ், சந்திரசேகர், சுகுமாறன், தனசேகரன் உள்ளிட்ட மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புக்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/sivagangai_01.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/sivagangai_02.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/sivagangai_04.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/sivagangai_03.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/sivagangai_05.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/sivagangai_06.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/sivagangai_07.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/sivagangai_09.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/sivagangai_08.jpg)