Two people, including a pump operator, lost of electrocution!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா வேப்பங்குப்பம் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் மின்விளக்கு கம்பம் நடுவதற்காக வேப்பங்குப்பம் ஊராட்சியில் பம்ப் ஆப்ரேட்டர் ஆக பணிபுரியும் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன்(45) மற்றும் ஏரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார்(55) இருவரும் சென்றுள்ளனர். அப்போது மின்விளக்கு கம்பத்தை நடுவதற்காக கம்பத்தைத் தூக்கி நிறுத்திய போது மின் கம்பியில் கம்பம் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

முத்துக்குமரன் வேப்பங்குப்பம் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வருபவர். அவருக்கு அசோக் குமார் உதவி செய்ய வந்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.