Advertisment

இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறித்த இருவர்..! 

Two people who came in a two-wheeler and snatched the chain ..!

திருச்சி, லிங்கம் நகரில் வசித்துவரும் கண்ணன், அவரது மனைவி உமா மகேஸ்வரி இருவரும் இணைந்து உணவு விடுதி நடத்திவருகின்றனர்.உமா மகேஸ்வரி தினமும் ஓட்டலுக்குச் செல்வது வழக்கம். வழக்கம்போல இன்று (15.11.2021) காலை தனது இருசக்கர வாகனத்தில் ராமலிங்க நகர் 5வது கிராஸ் வழியாக ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Advertisment

அப்போது எதிரே பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள், உமாமகேஸ்வரி அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினைப் பறித்துச் சென்றுள்ளனர்.இதுகுறித்து உமா மகேஸ்வரி, உறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இந்தச் செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் கொள்ளையர்கள் வந்த வாகனத்தின் நம்பரை வைத்து குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Advertisment

chain snatching trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe